( எம்.எப்.எம்.பஸீர்)

புத்தல, கட்டுகஹகல்லகே குளத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

மொனராகலை தேசிய  பாடசாலையில்  உயர்தரத்தில் கல்வி பயிலும், மொனராகலை டீசீ வீதியைச் சேர்ந்த மூன்று  நண்பர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 No description available.

நேற்று  முன் தினம் குறித்த மூவரும் 2 மோட்டார் சைக்கிள்களில், புத்தல, கட்டுகஹகல்லகே குளத்துக்கு செல்வதாக சென்றுள்ளனர். 

இந் நிலையில்  இரவாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால், பெற்றோர் பொலிஸாருக்கு இதனை தெரியப்படுத்திய நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

 இந் நிலையிலேயே புத்தல பகுதிக்கு அவர்கள் சென்றமை தெரியவரவே, புத்தல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந் நிலையிலேயே  கட்டுகஹகல்லகே குளத்தின் அருகே குறித்த நண்பர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மூவரும் அவ்விடத்தில் மது அருந்தியதாக நேரில் கண்ட இருவர் பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் அருகே இருந்து வெற்று மது போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

 இந் நிலையிலேயே அம்மூவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் எனற சந்தேகத்தில் பொலிசார் குளத்தில்  தேடுதல்களை சுழியோடிகளின் உதவியோடு முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மூவரின் சடலங்களும்  நேற்று (15) காலை  குளத்தின் ஆழமான அடிப்பகுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.