சதீஷ் கிருஷ்ணபிள்ளை

ஜனாதிபதி ஜோ பைடனின் உறுதிமொழிக்கு அமைய, அமெரிக்கப் படைகள் இம்மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளன.

தலிபான் இயக்கம் அரச படைகளுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்வது தலிபான் இயக்கத்தின் நோக்கம்.

தலிபான் இயக்கத்தின் ஆயுதமோதல்களால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மூன்றரை இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

ஒவ்வொரு நாளும் சுமார் 30,000 பேர் புலம்பெயர்வதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆப்கானிஸ்தானின் 228 மாவட்டங்கள் தலிபான் வசமாகியுள்ளது. 

அரச கட்டுப்பாட்டில் இருப்பவை 68 மாவட்டங்கள் மாத்திரமே. 

மேலும் 166 மாவட்டங்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற கடும் யுத்தம் நடக்கிறது.

எந்தெந்த மாவட்டங்களில் தலிபான் இயக்கம் அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ளதோ, அங்கெல்லாம் வன்முறையைப் பிரயோகித்து ஷரீ-ஆ சட்டத்தை அமுலாக்க தலிபான் இயக்கம் ஆர்வம் காட்டுகிறது. 

மக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது.

இங்கு ஓரங்கட்டப்பட்ட இனக்குழுமங்கள் தம்மீது இனச்சுத்திகரிப்பு கட்டவிழ்த்து விடப்படுமோ என்று அஞ்சுகின்றன. 

ஹஸாரா என்ற இனக்குழுமம் அதற்கு உதாரணம். பெண்களும், சிறுமிகளும் அச்சத்துடன் வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகளை தலிபான் இயக்கத்திற்கு எதிராக ஒன்றுபடுத்த இயலாதவராக ஜனாதிபதி அப்துல் கானி இருக்கிறார். அவர் வெளிநாட்டு உதவிகளைக் கோருகிறார். 

உள்ளூர் ஆயுதப் படைகள் தலிபான்களுடன் சண்டையிடுகின்றன. இது உள்நாட்டு ஆயுத முரண்பாட்டை மென்மேலும் தீவிரமடையச் செய்திருக்கிறது.

இந்த ஆயுத முரண்பாட்டின் மூலம் எதுவென்பதை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். வெளிநாட்டுத் தலையீடுகள் தான் மூல காரணம்.

1978ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் இயங்கிய கம்யூனிஸப் படைகள் ஆயுதப் பலத்தின் மூலம் ஆப்கான் அரசாங்கத்தைக் கவிழ்த்தன. ஆட்சியைக் கைப்பற்றின.

இந்த சமயத்தில், முஜாஹிதீன் இயக்கம் உருவானது. முஜாஹிதீன்கள் கம்யூனிஸ் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்தினார்கள்.

தமது ஆதரவுடன் இயங்கும் கம்யூனிஸ் அரசிற்கு ஆதரவளிக்க சோவியத் ஒன்றியத்தின் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-15#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.