(எம்.மனோசித்ரா)

ஆஸ்ட் 17 செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களில் ஒன்றாக இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மக்கள் ஒன்று கூடக் கூடிய எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 வீதத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலானோரே கலந்து கொள்ள முடியும். எவ்வாறிருப்பினும் பரந்த வெளிப்பகுதிகளுக்கு செல்வதைக் கூட இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாகவும்  இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.