ஓயாத நிழல் போர்..!

Published By: J.G.Stephan

15 Aug, 2021 | 02:18 PM
image

-ஹரிகரன் -
இன்னும் சில மாதங்களில் கொழும்பில் இருந்து விலகிச் செல்லப் போகும், அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், அண்மையில் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கும், செவ்வியளித்திருக்கிறார்.

இந்தச் சந்தர்ப்பங்களின் போது, துறைமுக நகரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. சீனாவினால் கட்டியெழுப்பப்படுகின்ற- பிராந்திய ரீதியாக ஒரு சர்ச்சைக்குரிய முதலீடாக பார்க்கப்படும், துறைமுக நகர் குறித்து, செவ்வி கண்டவர்கள் கேள்வி எழுப்பியதில் ஆச்சரியம் இல்லை.

அமெரிக்காவும், சீனாவும், போட்டி நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடலிலும், தென்சீனக் கடலிலும் இரண்டு தரப்புகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்ற சூழலிலும், துறைமுக நகரம் பற்றிய கேள்விகள் தவிர்க்க முடியாதவை. துறைமுக நகரில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா- அங்கு முதலீடு செய்வதை அமெரிக்கா தடுக்க முனையுமா என்றெல்லாம் அமெரிக்க தூதுவரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் முக்கியமானவை

இரண்டு செவ்விகளிலுமே அலெய்னா ரெப்லிட்ஸ், சில விடயங்களை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். துறைமுக நகரத்தை ஒரு வர்த்தக கேந்திர மையமாக மாற்றும் திட்டங்கள் இருந்தாலும், அது பலவீனமான சட்டங்களைக் கொண்டிருக்கிறது என்பது அதில் ஒன்று.  அமெரிக்க முதலீட்டாளர்கள் இங்கு முதலிட விரும்பமாட்டார்கள் என்பது இன்னொன்று.

இந்த இரண்டு விடயங்களுக்கும் அவர் விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். கொழும்பு துறைமுக நகர கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது சீனாவாகவே இருந்தாலும், இங்கு பரந்துபட்டளவிலான முதலீடுகளை இலங்கையும் எதிர்பார்க்கிறது சீனாவும் எதிர்பார்க்கிறது.

துறைமுக நகரம் தனியே சீனாவைச் சார்ந்த ஒரு முதலீட்டு வலயமாக இருந்தால், அது இலங்கைக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்து விடும். சீனாவின் கொலனி என்ற பட்டம் நிலைத்து விடும். அவ்வாறான ஒரு அடையாளத்துடன், மேற்குலக நாடுகளுடன் வணிக உறவுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே தான், இங்கு அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற ‘குவாட்’ நாடுகளையும் ஏனைய மேற்குலக நாடுகளையும் இங்கு முதலீடு செய்வதற்கு அரசாங்கம் அழைக்கிறது.

எல்லா நாடுகளும் முதலீடு செய்கின்ற போது தான், இது ஒரு பரந்துபட்ட வர்த்தக கேந்திரமாக மாறும் என்பது வெளிப்படை. அவ்வாறான இலக்கு மட்டும் தான், இந்த அழைப்புக்குப் பின்னால் உள்ள மர்மம் அல்ல.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-15#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25