புரிதலற்ற மிகைப்படுத்தல்

Published By: J.G.Stephan

15 Aug, 2021 | 02:10 PM
image

-கபில் -

“சர்வதேச வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியிருந்தாலும், சீன சார்புக் கொள்கையினால் மேற்குலகுடன் முரண்பட்டாலும், இலங்கையை தமது கண்காணிப்பு எல்லைக்கு வெளியே கொண்டு செல்வதற்கு மேற்குலகம் விரும்பப் போவதில்லை”

‘பஷிலைச் சந்திக்கத் தயாராகிறது கூட்டமைப்பு’ என்ற வீரகேசரி வாரவெளியீட்டின் செய்திக்குப் பின்னர், அதனைச் சார்ந்து எதிரும் புதிருமான பல்வேறு கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பு இப்போது, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தைக் காப்பாற்ற முனைகிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க கூட்டமைப்பை பயன்படுத்த அரசாங்கம் முனைகிறது என்றும், அதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதேநேரம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அரசுடன் பேசுவதாக இருந்தால் நிபந்தனைகள் தேவை என்று தனது பங்கிற்கு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திக் கூறியிருக்கின்றார். கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் விரும்புகிறதோ இல்லையோ- அவ்வாறான பேச்சுக்களுக்கு தமிழர் தரப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திக்கப் போகிறார் என சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகிய போதும், அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்தபோது, கூட்டமைப்புக்குள் இருந்த எந்த தரப்பும் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக தெரியவில்லை.

இப்போது பஷில் ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ரெலோ தரப்பில் எதிர்ப்பு இருப்பது போன்ற தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள தரப்புகள், அரசாங்கத்துடன் பேசுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் ஆச்சரியம் இல்லை. 

ஏனென்றால், ‘தமிழ்த் தேசியம்’ என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற தரப்புகள் கூட, ஒன்றையொன்று வீழ்த்தி அரசியல் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. நல்லாட்சி அரசுக்கு முண்டுக் கொடுத்தது கூட்டமைப்பு என்று குற்றம்சாட்டும். சுரேஷ் பிரேமச்சந்திரன், தாம் 2018 ஏப்ரலில் தனியாக அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடன் பேரம் பேசி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தனது கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனை வாக்கெடுப்பில் பங்குபெறச் செய்யாது ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றியதை மறுக்க முடியாது, 

எவ்வாறாயினும், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேன் குருசாமி ஆகியோரின் கருத்துக்களில் இருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை தொடங்குவதன் மூலம், பெரும் நெருக்கடியில் இருந்து அரசாங்கம், தப்பிக்க முனைகிறது என்பதே அது.

அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளில் சிக்கியுள்ளது என்பதை விட, உள்நாட்டு நெருக்கடிகளில் சிக்கியுள்ளது என்பது தான் சரியானது. அரசியல் அதிகாரங்கள் என்ற வகையில் மிகப் பலமான ஒரு அரசாங்கமாக இருந்தாலும், மிகப் பலவீனமான பொருளாரத்தை கொண்டிருக்கிறது தற்போதைய அரசாங்கம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-15#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13