காத்தான்குடியில் ஒரே இலக்கத் தகட்டுடன் இருந்த இருகார்களில், ஒரு கார் மீட்டதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு இலக்கத்தில் இரு கார்களுக்கு இலக்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதுடன்  குறித்த காரின் எஞ்சின் இலக்கம் மற்றும் செசி இலக்கம் வேறுவேறு இலக்கங்களை கொண்ட கார் ஒன்றை நேற்று சனிக்கிழமை(13) காத்தான்குடி பகுதியில் வைத்து கைப்பற்றியதுடன் அதன் சாதியை கைது செய்துள்ளயதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

காத்தான்குடி பகுதியில் போக்குவரத்து பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த கார் ஒன்றை சந்தேகம் கொண்டு நிறுத்தி பொலிசார் சோதனையிட்டபோது காரின் எஞ்சின் இலக்கமும் காரின் செசி இலக்கமும், வேறு வேறாக உள்ளதையடுத்து வாடகைக்கு விடப்பட்டுவரும் குறித்த காரை கைப்பற்றியதுடன் அதன் சாரதியை கைது செய்தனர்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரின் இலக்கத்தில் குருநாகலில் ஒரு கார் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து பொலிசார் இந்த இரு கார்களின் எந்த கார் குறித்த இலக்கத்துக்கு உரியது என கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.