தெற்காசியாவில் போட்டியிடும் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த பாகிஸ்தான் இலங்கையுடனான தனது உறவை அதிகரிக்க தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. மேலும் இலங்கை மக்களுடன் நல்லுறவை மேம்படுத்த பல திட்டங்களை உள்நாட்டில் முன்னெடுத்து வருகின்றது. மறுப்புறம் பௌத்த பாரம்பரியத்தை வெளிப்படுத்த கூடிய பாகிஸ்தானின் பல இடங்களை முக்கிய சுற்றுலா தளங்களாக மற்றியமைத்துள்ளது.
இருப்பினும், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பாரம்பரிய தளங்களிலுள்ள புத்தர் சிற்பங்கள் மற்றும் ஸ்தூபங்கள் மற்றும் புத்தரின் சிலைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் இவ்வாறான சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் காணப்படுகின்றன.
மேலும், சீன - நிதியுதவியில் கட்டப்படும் டயமர்- பாஷா அணை திட்டத்தினால் சுமார் நீண்ட பௌத்த பாரம்பரியத்தை கொண்ட சுமார் 30 ஆயிரம் சிற்பங்கள் மற்றும் புனித நூல்கள் அழிவடையும் நிலை உள்ளது. பாகிஸ்தானினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரின் கில்கிட் - பால்டிஸ்தான் பகுதியிலேயே இந்த நிலை உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வி இஸ்லாமாபாத்தில் இலங்கை பிக்குகளின் தூதுக்குழுவைச் சந்தித்திருந்தார். இலங்கையர்களுடன் நெருக்கம் கொள்ளவும் இரு தரப்பு மத சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த பாக்கிஸ்தானில் உள்ள பௌத்த பாரம்பரியங்கள் ஒரு சிறந்த தளமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் ஒரு சில பாகிஸ்தானியர்களினால் 1,700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை இடிக்கப்பட்டது. பௌத்த நாகரிகத்தின் முக்கியத்துவமுடையதாக இந்த சிலை உலகளாவிய ரீதியல் அறியப்பட்டிருந்த போதிலும் மதவெறிக்குழுவால் உடைக்கப்பட்டது.
இந்த சிலை உடைப்பு சம்பவம் குறித்த வீடியோக்களும் புடைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தொடர்கில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டளர்கள் கண்டனத்தை தெரிவித்திருந்த போதிலும் பாகிஸ்தானியர்கள் சிலர் இந்த துரதிருஷ்டவசமான செயலை ஆதரித்தனர்.
பண்டைய பாறை சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பெரும்பாலும் பாகிஸ்தானில் சேதமாக்கப்படுகின்றன. பௌத்த வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க உலகளாவிய அழைப்புகள் இருந்தாலும், பாகிஸ்தான் அரசு அதனை உள்வாங்க வில்லை. மறுப்புறம் பயங்கரவாத மற்றும் மத தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கடுமையாக குறைந்துள்ளது.
மறுப்புறம் பாரம்பரிய மதக் கட்டமைப்பைகளை சிதைப்பதன் ஊடாக சுற்றுலாப் துறை மேலும் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று தான் பாகிஸ்தானில் பௌத்த பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை இலங்கை மக்களால் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இரு தரப்பு உறுகளையும் பாதிக்கலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM