லெபனானில் எரிபொருள் டேங்கர் வெடிப்பு ; 20 பேர் பலி

By Vishnu

15 Aug, 2021 | 09:57 AM
image

லெபனானின் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் டேங்கர் லொறி வெடித்து சிதறியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

வெடிப்புக்கான காரணம் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

லெபனான் செஞ்சிலுவைச் சங்கம், அதன் குழுக்கள் வடக்கு கிராமமான டிலெயில் வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து 20 உடல்களை மீட்டதாகவும், குண்டுவெடிப்பில் காயமடைந்த அல்லது தீக்காயமடைந்த 79 பேரை மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதேவேளை வடக்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், வெடிவிபத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவ லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹாசன் அழைப்பு விடுத்தார்.

லெபனான் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், கடத்தல், பதுக்கல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை விநியோகம் போன்ற நடவடிக்கைகள் அங்கு அரங்கேறி வருகின்றன.

சிரிய எல்லையிலிருந்து டிலே சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

2020 ஆகஸ்ட் 4,  பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 214 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25