(எம்.மனோசித்ரா)
ஆட்பதிவு திணைக்களத்திலுள்ள அதிகாரிகளில் சிலர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையால் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
அதற்கமை நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் சகல பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடம்பெற மாட்டாது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ள வருகை தருமாறு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நபர்களுக்கு குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னரே தபால் சேவையூடாக தனிப்பட்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கும் அதனை தயாரித்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் , திருமண வைபவங்கள் , கடவுச்சீட்டு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையை துரிதமாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுடையவர்கள் வார நாட்களில் 011-5226126/100 (பிரதான காரியாலயம்) , 091-2228348 (தெற்கு மாகாண காரியாலயம்) , 037-2224337 (வடமேல் மாகாண காரியாலயம்) , 065-2229449 (கிழக்கு மாகாண காரியாலயம்) , 024-2227201 (வடக்கு மாகாண காரியாலயம்) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM