செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்: அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 03:19 PM
image

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறும் நிலையில்,  அஞ்சலி செலுத்துவதற்காக படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்துக்கு சென்ற மாணவிகளின் பெற்றோர் இராணுவம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம் ,பொலிஸார் ,புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெற்றோர் சிலர் இராணுவம் ,பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர். மேலும் அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார் ,இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18