மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்து காணப்படுவதனால் சில கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொது ஒன்று கூடல்கள் ஊடாகவே அதிகளவான தொற்றுக்கள் கொண்ட கொத்தணிகள் உருவாகின்றது. இதனால் ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், மரண சடங்குகள், வைபவங்கள் உட்பட ஏனைய நிகழ்வுகளிற்கு அதி உச்சமாக 15 பேர் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் புதிய சுற்று நிருபங்கள் நடைமுறைக்கு வரும்வரை இக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அதிகரித்து வருகின்ற கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாராக உள்ளதெனவும், தற்போது 4 விடுதிகளில் கொவிட் நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு கட்டில்கள் அதிகரிக்க வேண்டிள்ளதனால் மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையையும் எதிர்வரும் 16 ஆந் திகதி முதல் இணைத்துக்கொள்ளப்பட்டு கொவிட் நோயாளர்களுக்காக சிகிச்சைகள் அழிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதெனவும், அவசரமான அவசியமான நோயாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.கே.கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM