கடந்த நாட்களாக நாட்டில்  சமயல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு மற்றும் பால்மாவுக்கான தட்டுப்பாடுகள் நிலவிய நிலையில் மக்கள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அவற்றை கொள்வனவு செய்ய பெரும் பாடுபட்டனர்.

தற்போது கொரோனாவின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமாக பரவி நாளாந்தம் நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுக்கும் நிலையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில், தற்போதைய சூழலில்,  மக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், ஒருகொடவத்தை பகுதியில் மண்ணெண்ணெய் கொள்வனவுக்காக கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் படங்கள் எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

(படங்கள் : ஜே.சுஜீவ குமார்)