சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்கள் சிலவற்றை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை(16.08.2021) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல், நாடளாவிய ரீதியில்  கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பயிற்சிகளை வைத்தியர்கள் தற்போது நிறைவு செய்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.