செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ; தடைகளை தாண்டி சுடரேற்றிய சிவாஜிலிங்கம்

Published By: Digital Desk 3

14 Aug, 2021 | 12:00 PM
image

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். 

வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்று சனிக்கிழமை காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். 

குறித்த அஞ்சலிக்கு பொலிஸார்,  இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26