மாகாண எல்லைப்பகுதிகளில் முப்படை, பொலிஸார் இணைந்து விசேட கண்காணிப்பு: பொலிஸ் பேச்சாளர்

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 11:56 AM
image

(எம்.மனோசித்ரா)
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லை பகுதிகளில் முப்படையினரின் ஒத்துழைப்புக்களுடன் பொலிஸாரால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் போதும் தேவையானோர் மாத்திரமே பயணிக்க முடியும். இது தொடர்பில் விசேடமாக கண்காணிக்குமாறு மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் , நடமாடும் கண்காணிப்பு பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்புக்களுக்கு இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கக் கூடிய பிரதான வீதிகள் , குறுக்கு வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட சகலவையும் கண்காணிக்கப்படவுள்ளன. இதே போன்று ஏனைய மாகாண எல்லைகளிலும் பயணிக்க முடியாது.

மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்துக்கள் இயங்க முடியாது. மீறி இயக்கப்பட்டால் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:26:44
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07