மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அடுத்த இரு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எனினும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை தொழிலாளர்கள், சுகாதாரம், ஆடை மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் கொவிட்-19 தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட அட்டையின்றி பொது இடங்களில் பிரவேசிப்பதும் முழுமையாக தடைசெய்யப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.