மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வைத்து கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்டுள்ளதாக குளுவாஞ்சி குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விநாயகபுரம் அமைப்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்கத்தக்க இளைஞனே கைது செய்யப்ட்டுள்ளார்.

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி  வரும்போதே இன்று காலை 10.30 மணிக்கு விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்டவரிடம்  இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டத்துடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.