2020 ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவுக்கு இரு நாட்களின் பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் ஒளிபரப்பை வடகொரிய அரசு தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பியது. 

வட கொரிய மத்திய தொலைக்காட்சி இந்த வாரம் இங்கிலாந்து மற்றும் சிலிக்கு இடையிலான மகளிர் கால்பந்து போட்டியின் 70 நிமிடங்களை ஒளிபரப்பியது.

இந்த போட்டி உண்மையில் சில வாரங்களுக்கு முன்பு ஜூலை 21 அன்று நடைபெற்றது.

தென்கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வட கொரியா அதன் தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்பியது.

வர்ணனை இல்லாமல் மற்றும் குறைந்த தெளிவுத்திறனில் இந்த போட்டி ஒளிபரப்பப்பட்டது - காட்சிகள் எவ்வாறு பெறப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கொரோனாவிலிருந்து தனது பிரஜைகளை பாதுகாப்பதற்காக 2020 டோக்கியோ விளையாட்டுக்கு வடகொரியா தனது பிரதிநிதிகளை அனுப்பவில்லை.

வடகொரியா தமது நாட்டில் கொவிட் தொற்று இல்லை என்று கூறிகிறது. ஆனால் இது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.