வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மரணித்த அனைவருக்கும் கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என நவசமசமாஜ கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.