மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கத்தான்குடி பிரதான வீதியில் இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை ஒருமணியளவில் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி பிரதான வீதியில் ஓடுகளை இறக்கி கொண்டிருந்த லொறியொன்றின் பின் பகுதியுடன் மோதுண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறி சாரதி   மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் வஹாப்(50) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.