கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின்  எசல பெரஹெராவை முன்னிட்டு வருடாந்தம் கொப்பரைகளை வழங்கிவரும் இலங்கை இராணுவம் இவ்வருடத்திற்கான பெரஹெரா ஊர்வலத்தின் போது கண்டி நகரை ஒளியூட்டுவதற்காக 10 தொன் கொப்பரைகளை வழங்கி வைத்துள்ளது. 

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய மேற்படி கொப்பரை தொகை தலதா மாளிகைக்கு வழங்கி வைக்கப்பட்டது.  

எட்டாவது தடவையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கொப்பரைகளை கையளிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றிருந்த இராணுவ தளபதி உள்ளிட்ட குழுவினருக்கு தலதா சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. 

குருணாகல் போயகனவை தலைமையக வளாகமாக கொண்ட விஜயபாகு காலாட்படை சிப்பாய்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கொப்பரை தேங்காய்களை தலதா மாளிகைக்கு வழங்கும் திட்டம் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.