(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அழைப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

இன்றைய தினம்  பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 7 மணிக்கு மற்‍றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் 2.30 ஆரம்பமாகும்  முதல் போட்டியில்  இலங்கையின் இருபதுக்கு  20 மற்றும் சர்வதேச ஒருநாள் அணிகளின் தலைவரான தசுன் ஷானக்க தலைமயிலான கிறே அணியை அஷான் பிரியன்ஜன் தலைமையிலான கிரீன் அணி சந்திக்கிறது. 

இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான புளூ அணியை தினேஷ் சந்திமால் தலைமையிலான ரெட் அணி எதிர்த்தாடவுள்ளது.

கிறே,புளு,ரெட், கிரீன் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும்  இப்போட்டித் தொடரில்  தலா ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் இரண்டு தடவைகள்  மோதிக்கொள்ளும். 

புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரண்டு அணிகள் இம்மாதம் 24 ஆம் திகதியன்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.