லிந்துலை பம்பரகலை தோட்ட மிடில் பிரிவில் சிறுமிகள் 2 பேரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வயோதிபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த, 4 மற்றும் 6 வயதுடைய இரு சிறுமிகளையும் நேற்று மாலை மாடுகள் வளர்க்கும் தொழுவத்திற்கு அழைத்து சென்றே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு சிறுமிகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

67 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 (க.கிஷாந்தன்)