கொவிட்-19 க்கு எதிரான முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் இந்தியாவிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டை வந்தடையும் பயணிகள் விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைக்கு மாத்திரம் உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தியாவைத் தவிர பிற நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கான செயல்பாட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.