பிலியந்தலை - பண்டாரகம பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் நேற்று (07) பண்டாரகம பஸ் நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

 குறித்த திருட்டு சம்பவத்தில் இருவர் ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த இருவரும் தம்பதியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.