(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் விபரம் இனி பாதுகாப்பு தரப்பினரால் பரிசீலிக்கப்படும்.
இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு சேவையாளர்களில் 285 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் களுத்துறையில் உள்ள சாரதி கல்லூரியில் சிகிச்சையளிக்கப்படும். எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கது. ஆகவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது போக்குவரத்து சேவையினை முழுமையாக முடக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொது போக்குவரத்து சேவையும் கொவிட் -19 வைரஸ் பரவலடைவதற்கு ஒரு காரணியாக உள்ளது என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் அநாவசிய தேவைக்காக பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள முடியும். எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கது என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM