(ஏ.என்.ஐ)
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியுள்ள நிலையில் தலிபான்கள் பாரிய அளவிலான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதுடன் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் முந்தைய மாகாண அரசு அதிகாரிகளை தலிபான்கள் கொடூரமாக கொலை செய்ததாக காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கஸ்னி மாகாணத்தில் உள்ள மலிஸ்தான் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு துறைசார் நபர்களை தலிபான்கள் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான்களின் ஆக்கிரமிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்துடன் போர்க்குற்றங்களை உருவாக்கும் அப்பட்டமான பொதுமக்கள் படுகொலை என இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தூதரகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சர்வதேச சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு சிவில் மனிதாபிமான தரப்பு மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மிக சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தான் நகரங்களுக்கு எதிரான தலிபான்களின் வன்முறை தாக்குதலை அமெரிக்கா கண்டித்தது.
நிரந்தர போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பயங்கரவாதக் குழுவிற்கு அழைப்பு விடுத்தது.
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டது.
ஜவ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபர்கான் மீதான தாக்குதலும், லஷ்கரை கைப்பற்றுவதற்கான முயற்சிகளும் தொடர்வதாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தலிபான்கள் தனது ஆட்சியை வலுக்கட்டாயமாக திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மற்றும் அமைதி நடவடிக்கையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் மற்றும் உரிமைகள் மீதான ஒரு புறக்கணிப்பை வெளிப்படுத்தும் நிலையில் நாட்டின் மனிதாபிமான நெருக்கடியை தலிபான்கள் மேலும் மோசமாக்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் போர் அழிவுகரமான கட்டத்தில் இருப்பதால், பேரழிவைத் தவிர்க்க பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM