கொவிட் தொற்றால் 700 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை: 19 பேர் பலி - அவசர சிகிச்சை பிரிவில் பலர் அனுமதி..!

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 05:02 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் 700 கர்ப்பிணிகள் மற்றும் புதிதாக பிரசவம் இடம்பெற்ற தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெருமளவானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா, 19 கர்ப்பிணிகள் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்குச் செல்வோர் வீதம் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் கர்ப்பிணிகளின் உயிரிழப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க சகலரும் தாமதிக்காது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகிறது. இலங்கையில் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. ஆரம்பத்தில் சிக்கல் நிலையிலுள்ள கர்ப்பிணிகளுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு சகல கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதோடு, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 150,000 - 200,000 கர்ப்பிணிகள் உள்ளனர். ஆனால் இவர்களில் சுமார் 30,000 பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளமை கவலைக்குரியது. தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தாய்மாரில் 75 வீதமானோர் நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதோடு, கனிசமானோர் எவ்வித நோயும் அற்ற இளம் கர்ப்பிணிகளும் ஆவர். எனவே சகல கர்ப்பிணிகளும் தாமதிக்காது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04