யாழில், நீண்ட கால குடும்ப பகை காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ள நிலையில், காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உறவு முறையான 19 வயது இளைஞனும் , 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப பகை நிலவி வந்துள்ளது. 

இந்நிலையில் தமது பிள்ளைகள் காதலிப்பதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் காதலர்கள் இருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முனைந்துள்ளனர். 

இந்நிலையில், இருவரையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை , அங்கு காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.