மட்டக்களப்பில் சிறியதாயின் 14 வயது தங்கைகயை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனையும் இளைஞனுக்கு உதவிய அவனது பாட்டியையும்  எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் குறித்த இளைஞனின் தந்தை இரு பெண்களை திருமணம் முடித்த நிலையில் இளைஞனின் தாய் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், இளைஞன் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த இளைஞரின்  தந்தை இரண்டாவதாக திருமணம் முடித்த சிறிய தாயின் 15 வயதான மகளை (இளைஞனின் தங்கை) அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனது பாட்டி வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து சிறுமியின் தாய் பொலிசரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில், பொலிஸார் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த இளைஞனையும் அவனது பாட்டியையும் கைது செய்ததுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.