(இராஜதுரை ஹஷான்)
திருகோணமலை துறைமுகம், மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான 33 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயற்படும் வசந்த சமரசிங்க திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான 33 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது.
திருகோணமலை துறைமுகம், எண்ணெய் குதங்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்காவிற்கு வழங்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முடிந்தால் அமைச்சரவை பத்திரத்தின் பிரதியை பகிரங்கப்படுத்த வேண்டும்.
2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் திருகோணமலை எண்ணெய் குதங்கள் 35 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் 2038 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவடையும். நாம் தற்போது 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உள்ளோம். என்பதை ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க அறியாமல் கருத்துரைக்கிறார்.
மேலும், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியினரும், அவர்களுக்கு சார்பாக செயற்படும் அமைப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கும் காலம் தகுந்த பாடத்தை கற்பிக்கும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM