நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புக் கடமைகளில் சுமார் 600 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.