வைத்திய நிபுணர்கள் நாட்டை முடக்குமாறு தெரிவித்தும் ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது - ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி

Published By: Gayathri

10 Aug, 2021 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அனைத்து தீர்மானங்களையும் தாமதித்தே எடுக்கின்றது. 

தடுப்பூசி ஏற்றுவதற்கு நாட்டில் சிறந்த சுகாதார கட்டமைப்பு இருக்கும்போது அரசாங்கம் ஊடக களியாட்டத்தை மேற்கொண்டுவருகின்றது. 

அத்துடன் நாட்டை முடக்குமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவித்தும் அதனை அரசாங்கம் ஏன் செற்படுத்தாமல் இருக்கின்றது என்பதை  வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த நிலைமை நாட்டில் திடீரென ஏற்பட்டது அல்ல. 

2020 பாராளுமன்ற தேர்தலின்போதே இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தோம். 

ஆனால் நாட்டு மக்கள் எமது நிலைப்பாட்டை நிராகரித்து தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்தனர். என்றாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுமுதல் மேற்கொண்டுவரும் தீர்மானங்கள் அனைத்தும் நாட்டை மோசமான நிலைக்கே கொண்டுசெல்கின்றது.

மேலும் இவ்வாறான தொற்று நிலைமை ஏற்படும்போது சுகாதார துறையே மிகமுக்கியமானதாகும். ஆனால் இந்த காலப்பகுதியில் சுகாதார துறையில் இருந்த அனுபவமுள்ள பல வைத்திய நிபுணர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். 

சுகாதார அமைச்சின் செயலாளர்கள் 3பேர் இடமாற்றப்பட்டிருக்கின்றனர். நாட்டில் 22ஆயிரத்தும் அதிக வைத்தியர்கள் இருக்கின்றனர். அதேபோன்று 10 ஆயிரத்துக்கும் அதிக குடும்ப சுகாதார அதிகாரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிக பொது சுகாதார பரிசோதகர்களும் 45ஆயிரத்துக்கும் அதிக தாதியர்களும் என ஒரு இலட்சத்தி 50ஆயிரத்துக்கும் அதிக சுகாதார துறை அதிகாரிகள் இருக்கின்றனர். 

அதில் தடுப்பூசி ஏற்றக்கூடியவர்கள் என ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கின்றனர். ஆனால் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் சுகாதார துறையை அரசாங்கம் முறையாக செயற்படுத்தவில்லை.

அரசாங்கம் சுகாதார துறையை முறையாக பயன்படுத்தி தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டிருந்தால்,  தடுப்பூசி ஏற்றுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியதில்லை. 

கிராம மட்டத்தில் சுகாதார பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி இதனை செய்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் விடயத்தை ஊடக களியாட்டமாக்கி இருக்கின்றது. 

கொவிட் தொற்று ஆரம்ப காலத்தில் பிரதான நகரங்களில் தொற்று நீக்கம் செய்வதை காணக்கூடியதாக இருந்தது. 

அதேபோன்று கொவிட்டை கட்டுப்படுத்த இராணுவ மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கைகள் காணப்பட்டன. இந்த ஊடக களியாட்டங்கள் எதனையும் தற்போது காணமுடியவில்லை.

மேலும் கொவிட்டை கட்டுப்படுத்த உலக நாடுகள் புதிய சட்டங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் நாங்கள் இன்றும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சட்டத்தையே செயற்படுத்தி வருகின்றோம். 

புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது. தற்போது கொவிட் சட்ட மூலம்  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது. அதில் பல விடயங்கள் எமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுதொடர்பாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அத்துடன் கொவிட் தொற்று ஏற்பட்டு ஆரம்பத்திலேயே இதற்கு முகம்கொடுக்க சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் சிகிச்சைக்கு தேவையான வசதிவாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ளுமாறும் வைத்தியசாலை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சீஜன் வசதிகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்ககொள்ளுமாறும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தார். 

ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை. கொவிட்டில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. 

அனைத்து தீர்மானங்களையும் தாமதித்தே எடுத்துவருகின்றது. அதன் காரணமாக நாட்டில் நோய் தொற்றாளர்களும் அதிகரித்திருக்கின்றதுடன் மரணங்களும் அதிகரித்திருக்கின்றன. 

அதனால் கொவிட் மரணவீதங்களில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டை சில நாட்களுக்கு முடக்கவேண்டும் என வைத்திய நிபுணர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கின்றபோது அரசாங்கம் அதனை செய்யாமல் இருக்கின்றது. 

அதனால் கொவிட் கட்டுப்படுத்தும் செயலணியை நீக்கிவிட்டு விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவொன்றை மீண்டும் அமைக்கவேண்டும். 

வைத்திய நிபுணர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏன் நிறைவேற்றாமல் இருக்கின்றது என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58