நெவில் அன்தனி
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பதற்கு மிகுந்த ஆவலாக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று அறிவித்தது.
அத்துடன் லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான கால அட்டவணையில் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட தயாராவதையும் ஐசிசி உறுதிப்படுத்தியது.
இதற்கான விண்ணப்பதை சமர்ப்பிப்பதற்காக செயற்குழு ஒன்றை ஐசிசி நியமித்துள்ளது.
30 மில்லியன் கிரிக்கெட் இரசிகர்கள் வாழும் ஐக்கிய அமெரிக்காவில், லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இணைப்பது மிகவும் பொறுத்தமானது என ஐசிசி தெரிவித்துள்ளது.
பாரிஸ் 1900 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவதாகவும் கடைசியாகவும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருந்தது.
அவ்விழாவில் பிரித்தானியாவும் வரவேற்பு நாடான பிரான்ஸும் மாத்திரமே பங்குபற்றியிருந்தன.
இதன் பிரகாரம் ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பின்னர மீண்டும் கிரிக்கெட் விளையாடப்படவுள்ளது.
இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்மிங்ஹம் 2021 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.
இது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைக்கப்படுவதற்கான உந்துசக்தியாக அமையும் என நம்பப்படுகின்றது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைக்கப்படுவதன் மூலம் அவ் விளையாட்டுக்கும் ஒலிம்பிக்குக்கும் அனுகூலம் கிடைக்கும் என ஐசிசி தலைவர் க்றெக் பார்க்லே தெரிவித்தார்.
'மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஒலிம்பிக் விளையாட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்திமுடித்த சர்வதேச ஒலிம்பிக் குழுவினர், டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர், ஜப்பான் மக்கள் அனைவரையும் ஐசிசியின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் முதலாவதாக வாழ்த்த விரும்புகின்றேன். அவ் விளையாட்டு விழா மிகவும் அற்புதமாக இருந்தது. அத்துடன் உலகின் கற்பனையையும் அது சுண்டி இழுத்தது.
எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமாக கிரிக்கெட் அமையவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்' என பார்க்லே குறிப்பிட்டார்.
'இந்த முயற்சியில் எமது கிரிக்கெட் விளையாட்டு ஒன்றுபட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு விழாவை கிரிக்கெட்டின் நீடிய எதிர்காலத்தின் ஒரு பகுதியாக நாங்கள் நோக்குகின்றோம். முழு உலகத்திலும் எங்களுக்கு (கிரிக்கெட்டுக்கு) 100 கோடிக்கு மேற்பட்ட இரசிகர்கள் உள்ளனர். அவர்களில் 90 வீதமானவர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படுவதைப் பார்க்க விரும்புகின்றனர்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, ஐசிசி ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் தலைவர் இயன் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி சுயாதீன பணிப்பாளர் இந்த்ரா நூயி, ஸிம்பாப்வே கிரிக்கெட் சபைத் தலைவர் டவெங்வா முக்குலானி, ஐசிசி இணை உறுப்பினர் பணிப்பாளர் மஹிந்த வல்லிபுரம், யூஎஸ்ஏ (ஐக்கிய அமெரிக்கா) கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பராக் மராத்தே ஆகியோரும் இக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM