வீண் கலவரம் வேண்டாம்..!: நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார் ரமேஷ் பத்திரண

By J.G.Stephan

10 Aug, 2021 | 02:23 PM
image

(எம்.மனோசித்ரா)
சீனி தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று நுகர்வோர் மத்தியில் வீண் கலவரம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு தேவையான சீனி இருப்பில் உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனி தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று நுகர்வோர் மத்தியில் வீண் கலவரம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு தேவையான  சீனி இருப்பில் உள்ளது. சீனிக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதியாளர்களால் பெருமளவில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படக் கூடிய வாய்ப்பு இல்லை. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தோடு உரிய விலைக்கு விநியோகிப்பதற்கு அவசியமான சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right