கோ எயார் விமான சேவை  மும்பையிலிருந்து  கட்டார் - கொச்சின்  மற்றும் கண்ணூர் ஆகிய விமான தளங்களை இணைக்கும் வகையில் சேவையை ஆரம்பித்துள்ள நிலையில் கட்டார் இராஜ்ஜியத்துடன் இந்தியா எப்போதும் நட்பு, வணிகம் மற்றும் இராஜதந்திரத்தின் அடிப்படையில் சிறப்பு பிணைப்பை கொண்டுள்ளதாக கோ எயார் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

மும்பை மற்றும் தோஹா இடையே வாரத்திற்கு நான்கு முறை நேரடி விமான பயணங்கள் இடம்பெற உள்ளது.  

மேலும் கொச்சின் - தோஹா - கொச்சி மற்றும் கண்ணூர் - தோஹா - கண்ணூர் வழித்தடங்களில் பயணிகள் வாரத்திற்கு இரண்டு முறை சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்தியாவில் கடந்த மார்ச்  மாதம் 23 ஆம் திகதி  முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. 

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை முதல் கத்தார் உட்பட 28 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட காற்று குமிழி ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவிலிருந்து சிறப்பு சர்வதேச பயணிகள் விமான சேகைள் இயக்கப்படுகின்றன.

கத்தாருக்கான சேவைகளின் அறிமுகத்தைக் குறிக்கும் விதமாக, மும்பை - தோஹா - மும்பையில் 26,666 இந்திய ரூபா, கொச்சி - தோஹா - கொச்சி 37,118 இந்திய ரூபா மற்றும் கண்ணூர் - தோஹா - கண்ணூர் வழித்தடங்களில் முறையே, 32,332 தொடங்கி தொடக்க திரும்பக் கட்டணங்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.