குடந்தையான்
தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் அரசியலை முன்வைத்து பரபரப்பாகியிருக்கிறது.செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வைப்பலவீனபடுத்தவும், அதன் கூட்டணிக்குள் பிளைவை உண்டாக்குவதற்குமான அனைத்து முயற்சிகளையும்தி.மு.க. அரசியல் ரீதியாக மேற்கொண்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சியைப் பெறுபேற்ற நூறு நாட்களுக்குள் அந்த ஆட்சிக்கு எதிராகஅ.தி.மு.க. நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அக்கட்சியினரிடையே போதிய ஆதரவு இல்லாததாலும்,இவ்விடயத்தில் கூட்டணி கட்சியை ஒருங்கிணைத்து அரவணைத்து செல்லாததாலும், அதன் உள்ளகவிடயங்கள் அம்பலமாகியுள்ளன.
இதனை உணர்ந்துள்ள, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அ.தி.மு.க.வையும், அதன்கூட்டணி கட்சிகளையும் பிளவுப்படுத்துவதற்காக திட்டமிட்டு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் மீதமுள்ள9 மாவட்டங்களில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும்தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது.
உடனடியாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பெரும்பாலும் தமிழகத்தின்வடமாவட்டங்களில் நடைபெறவிருப்பதால், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருக்கும்பா.ம.க. இடையே பிளவை ஏற்படுத்தவும், விரிசலை உண்டாக்கவும் ஆளுங்கட்சியான தி.மு.க. முனைப்புக்காட்டுகின்றது.
இதற்காக அ.தி.மு.க. மீது2015ஆம் ஆண்டில் பா.ம.க., அப்போதைய ஆளுநர் மூலமாக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை தற்போதுதூசி தட்டி நடத்த தீர்மானித்திருக்கிறது. இதன் மூலம் அ.தி.மு.க. அமைச்சர்களை, பா.ம.க.கொடுத்த ஊழல் புகார்களை வைத்தே நடவடிக்கை எடுக்க தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-29
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM