வவுனியா மரக்காரம்பளை பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (09) மாலை குறித்த குடும்பஸ்தர் மரக்காரம்பளையில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.

இதன்போது அந்தபகுதியில் மதுபோதையில் நின்றிருந்த, உணவக உரிமையாளர் மற்றும் நபர் ஒருவரும் இணைந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

தாக்குதலுடன் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.