யாழில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் அதன் உரிமையாளரான பெண்ணொருவர் 5 நாட்களாக கவலையில் சாப்பிடாமல் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
“அவரது வீட்டில் செல்லப் பிராணியான நாய் கடந்த 5 நாட்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளது. அந்த சோகத்தில் வயோதிப் பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வெளிநோயாளர் பிரிவில் அனுமதித்த நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. அதனையடுத்து அவரது சடலத்தில் கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை சுகாதார முறைப்படி மின்தகனம் செய்வதற்கு அனுமதியளித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM