மாத்தளையில் 24 மணிநேர நீர்வெட்டு

By Vishnu

10 Aug, 2021 | 09:36 AM
image

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (ஆகஸ்ட் 10) முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 11) காலை 8.00 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

உடுகம, பாலபத்வல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமந்தவ நிகவல பிரிவுகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

´விசல் மாத்தளை´ வேலைத்திட்டத்தின் நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை காரணமான இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right