எதிர்வரும் ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலக் கிண்ணத்துக்கான நியூஸிலாந்தின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ரோஸ் டெய்லர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் கொலின் டி கிராண்ட்ஹோம் இடம் பெறவில்லை.

எனினும் நியூசிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, லோக்கி பெர்குசன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோரும் சலகதுறை ஆட்டக்காரர்களான டேரில் மிட்செல் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சுக்காக டாட் ஆஸ்ட்லே, இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னருடன் நியூஸிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துடுப்பாட்ட வரிசையில் டிம் சீஃபர்ட், மார்ட்டின் கப்டில், டெவோன் கான்வே மற்றும் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஏனைய சிறந்த வீரர்களுடன் இணைந்து முன்னணி வகிக்கின்றனர்.

இது தவிர வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே 16 வது நபராக பயணம் செய்வார்.

ஒக்டோபர் 17 முதல் நவம்பவர் வரை டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே நியூசிலாந்து செப்டம்பர் தொடக்கத்தில் பங்களாதேஷில் ஐந்து டி-20 போட்டிகளிலும், மாதத்தின் இறுதியில் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் பங்கெடுக்கும் வீரர்களையும் நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

மொத்தமாக 32 வீரர்கள் இந்த சுற்றுப்பயணங்களில் ஈடுபடுவார்கள்.