மக்கள் பணிக்காக செந்தில் தொண்டமானின் பெயர் விருதுக்கு பரிந்துரை

By T Yuwaraj

09 Aug, 2021 | 08:28 PM
image

World Book of Records என்பது உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அதன் முதன்மை குறிக்கோள்  உலக தரத்தின் செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் நிகழ்வுகளை பதிவு செய்தல், கெளரவித்தல், பட்டியலிடுதல், பாராட்டுதல், அங்கீகரித்தல் மற்றும் தீர்ப்பளித்தல் ஆகும். 

No description available.

ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய சான்றோர்கள் முன்னிலையில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி அவர்களுடைய சாதனைகளை கெளரவிக்கிறது World Book of Records நிறுவனம் .

அறிவியல் , விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சுகாதாரம் , சுற்றுச்சூழல் ,  சமூக மாற்றம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் பணிகளை உலகறிய செய்கிறது World Book of Records நிறுவனம்.

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின்  இணைப்பு செயலாளருமான  செந்தில் தொண்டமான், இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும்  முன்னெடுத்த கொவிட் பெருந்தொற்று  பணி மற்றும் மக்களோடு மக்களாக களத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதற்காகவும் அவருடைய பெயர்   World Book of Records விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நோர்வே, சுவீடன், பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த  World Book of Records நிறுவனத்தை சேர்ந்த குழு  உறுப்பினர்கள் செந்தில் தொண்டமான் பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரசின் நடவடிக்கைகளை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச் செல்லுதல், தனி நபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, கொவிட் பெருந்தொற்று காலத்தில் முககவசம், தடுப்பூசி, சமூக இடைவெளி குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தியது, 

முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை நடத்தியது என மக்கள் நலனை முன்னிறுத்தி செந்தில் தொண்டமான் பணியாற்றியதற்காக World Book of Records விருதுக்கு இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்து தூதுவர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரை...

2022-10-04 17:17:07
news-image

யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 153...

2022-10-02 13:54:14
news-image

தன்னார்வ சுற்றுலா பயணத்தில் சிறுவர் பாதுகாப்பு...

2022-10-01 21:40:38
news-image

கலைக் கமலின் 56ஆவது "கீத் ராத்"

2022-09-30 22:19:41
news-image

இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழிற்சங்கத்தின் 7...

2022-09-30 16:17:38
news-image

சக்தி பரிமளம்

2022-09-29 16:02:50
news-image

மதுசங்க ரத்நாயக்கவின் வயலின் இசை

2022-09-29 15:18:07
news-image

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா "கவியரசி" எழுதிய "சரியான...

2022-09-29 15:56:33
news-image

பிரமிளா பிரதீபனின் "விரும்பித் தொலையுமொரு காடு"...

2022-09-29 15:15:41
news-image

வெலிமடை ரபீக்கின் கவிதை நூல் அறிமுக...

2022-09-29 15:14:00
news-image

திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல்...

2022-09-28 22:48:10
news-image

வரலாற்றுச்சிறப்புமிக்க இருநிகழ்வுகளின் 125 ஆவது ஆண்டுநிறைவுவிழா!

2022-09-28 15:17:31