சந்தையில் பால்மாவுக்கு பாரிய தட்டுப்பாடு: தொடர்ந்தும் நட்டத்தில் விநியோகிக்க முடியாது என்றது நிறுவனங்கள்

Published By: J.G.Stephan

09 Aug, 2021 | 04:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
பால் மா இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்டுவரும் நட்டத்தை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்து பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்திக்கொண்டுள்ளன. அதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் அதிக நாட்களாக சந்தைகளில் பால்மாவுக்கான தட்டுப்பாடு பாரியளவில் ஏற்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக, பால்மா இறக்குமதி செய்யும் நிறுவன பிரதானி ஒருவர் குறிப்பிடுகையில்,  உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்படும் நட்டத்தை தடுப்பதற்காக பால்மா இறக்குமதி செய்வதை நிறுத்தி இருக்கின்றோம். அதனால் தற்போது சந்தைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைமையில் தொடர்ந்தும்  தற்போதுள்ள விலைக்கு பால்மா விற்பனை செய்ய முடியாது.

மேலும், தற்போதுள்ள விலைக்கு பால்மா விற்பனை செய்வதன் மூலம்  ஒரு கிலோ பால்மாவுக்கு 270 முதல் 300 ரூபாவரை நிறுவனங்களுக்கு நட்டமேற்படுகின்றது. பால்மாவின் விலை அதிகரிக்க கடந்த ஜனவரி மாதம் முதல் 4 தடவைகள் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகாரசபையிடம் அனுமதி கோரி இருந்தபோதும், அதற்கான அனுமதி வழங்காதமையால், கடந்த சில காலங்களாக பால்மா நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்து 500மில்லியன் ரூபாவரை நட்டம் ஏற்பட்டுவருகின்றது.

அத்துடன் கடந்த காலங்களில் இருந்து கப்பல் கட்டணம் மும்மடங்காக அதிகரித்திருப்பதுடன் பொதியிடல்  கட்டணம் நூற்றுக்கு 30வீதம் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று இன்னும் பல விடயங்கள் பால்மா நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உலக சந்தையில்  மால்மா மெட்ரிக் தொன் ஒன்று 2800 டொலருக்கு இருந்தபோதும்  தற்போது அது 4ஆயிரத்து 200 டொலர் வரை அதிகரித்திருக்கின்றது.

அதனால் பால்மா விலை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்வரை, பால்மா இறக்குமதி செய்வதை நிறுத்தி, தற்போது நிறுவனங்களில் இருக்கும் தொகையை சந்தைக்கு விநியோகிப்பதை வரையறுத்து, இந்த மாதத்தில் பால்மா  சந்தைக்கு விநியோகிப்பதை  நூற்றுக்கு 65 வீதத்தால் குறைத்திருக்கின்றது.

எனவே தற்போது  945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 1300 ரூபா வரையும் 380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவரும் 400 கிராம் பால்மாவின்  விலையை 495 ரூபாவரையும் அதிகரிக்குமாறே பால்மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரி வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06
news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம்...

2024-12-11 09:55:45
news-image

வடக்கு ஆளுநருக்கும் பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையே...

2024-12-11 09:54:54
news-image

வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில்...

2024-12-11 09:22:41
news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50