பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.