கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன்போது அங்கு வரும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நடப்பதற்கு முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலியொன்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் லயன் ‍எஸ். மனோகரனால் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு மேல் மாகாணத்துக்கான போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.யூ. சரத் குமார, ஜனாதிபதி செயலகத்தின் லயன் எஸ்.பாலகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவ குமார்)