சரணாகதி அடைந்தார் ஹக்கீம்

Published By: Digital Desk 2

09 Aug, 2021 | 05:27 PM
image

எம்.எஸ்.தீன் 

அரசியல் கட்சி எனும் போது அதற்கு கொள்கைகள் இருக்க வேண்டும். குறித்த கட்சி எந்த சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அச்சமூகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அக்கொள்கைகள் இருக்க வேண்டும்.

 

ஆனால், முஸ்லிம்களின் தாய்க்கட்சி என்றழைக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் கொள்கைகளை படிப்படியாக இழந்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவரும் எதனைச் செய்தாலும் அதுவே கட்சியின் கொள்கைகள் என்ற பரிதாபநிலையை அக்கட்சி அடைந்துள்ளது. இதே நிலையிலே ஏனைய முஸ்லிம் கட்சிகளும் உள்ளன.  

 

கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலமாக முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு கொள்கையும் கிடையாது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்தது. ஆனால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 

 

இதனால், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஆதரவாளர்களும், உயர்பீட உறுப்பினர்களும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குரிய விசாரணைகள் நடைபெற்றன. இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-24

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27