13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12 வயது தம்பி கைது - வவுனியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

09 Aug, 2021 | 07:56 PM
image

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது அக்காவை 12 வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 13 வயது சிறுமி வயிற்றுகுத்து காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தமையினையடுத்து ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சிறுமியளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயதுடைய குறித்த சிறுமியின் தம்பி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சூம் செயலிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுவதினால் சிறுவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது.

எனினும் பிள்ளைகளின் தொலைபேசி பயன்பாடுகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்தாமையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03