இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் யாழில் வாகன பேரணி

Published By: Gayathri

09 Aug, 2021 | 01:39 PM
image

பொலிஸார் , சுகாதாரப் பிரிவினரின் தடைகளைத் தாண்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். நகரில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.

24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு,கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ். நகரில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ். நகர வீதி வழியாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்து குறித்த வாகன பேரணி நிறைவு பெற்றது.

வாகன பேரணியானது ஆரம்பமாகி யாழ். நகரை வந்தடைந்த போது பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பேரணி  நடத்த முடியாது என தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

வாகன பேரணியில் சென்றோர் தாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணி தொடர்ந்து செல்வதாக  தெரிவித்து பொலிசாரின் தடையை மீறி  குறித்த வாகன பேரணி தொடர்ந்தது. 500க்கும் மேற்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52