தடுப்பூசி செலுத்தப்பட்ட யாத்ரீகர்களுக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்த சவுதி அரேபியா

By Vishnu

09 Aug, 2021 | 12:25 PM
image

உம்ரா யாத்திரையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 9 முதல் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு யாத்ரீகர்கள், மக்காவுக்கு வருகை தர சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

உம்ரா யாத்திரையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் இஸ்லாமிய புனித நகரமான மக்காவிற்கு வெளிநாட்டில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட யாத்ரீகர்களை சவுதி அரேபியா படிப்படியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உம்ரா பயணத்தை அனுமதிக்க தொடங்குவதாக அறிவித்தது.

மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த உம்ரா கோரிக்கையினை அடுத்து மேற்கண்ட தகவலை சவுதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதன்படி மத்திய கிழக்கு இராச்சியம் அதன் நுழைவு-தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பக்தர்கள் வந்தவுடன் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு யாத்ரீகர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவுதி அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியையும் செலுத்த வேண்டும்.

ஹம்ஜின் வருடாந்திர யாத்திரையைப் போலல்லாமல், ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படும் உம்ரா கடந்த ஒக்டோபரில் உள்நாட்டு யாத்ரீகர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இரண்டு யாத்திரைகளும் சவுதி அரேபியாவின் முக்கிய வருவாய் ஈட்டுபவை, சாதாரண நேரங்களில் ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை  நாட்டுக்கு (10.3 பில்லியன் யூரோக்கள்) கொண்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right