வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர பாற்குட பவனி பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை (11ஆம் திகதி) இடம்பெறவிருந்த வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர பாற்குட பவனி பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் வீரகேசரிக்குத் தெரிவித்தார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.